அன்பர்களே,

இன்று மனிதர்களுக்கு பணம் மட்டுமே கண் முழுக்க தெரியும்
காரணத்தால் தான்,  யானை போகும் வழித்தடங்களை மறித்து கட்டிடங்களையும் விடுதிகளையும் கட்டிவிட்டு,  அது அதன் வழித்தடத்தில் வரும்போது அத்துமீறி நுழைந்ததாக அதை தீ வைத்து பயமுறுத்துதல் போன்றவை நடக்கின்றன.

அது மட்டுமில்லாமல் டயரை கொளுத்தி காட்டு யானை மீது வீசியது,  எந்த அதிகப்படியான உணர்வுகளும் இல்லாத, ஒருசெல் உயிரினங்களைவிட அறிவு குறைவான மக்கள் மட்டுமே செய்யும் செயல்.

பயமாக இருந்தால் நாம் வேறு இடங்களுக்கு நகர்ந்து விடலாம்.  அல்லது அதனை பயமுறுத்தியதுடன் நிறுத்தி இருக்கலாம்.   யானை மீது டயரை வீசியது மிருகத்தனமான செயல்.  உணர்வு ஏதுமற்ற  மக்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல்.  ஆகவே தன்உணர்வு பெருக்கம் நம்மை மனித தன்மை உள்ளவர்களாக மாற்றும்.  அதற்க்கு ஓஷோவின் தியானங்கள் எளிய வழி.

நேசத்துடன்
நிர்தோஷ்.