ஒரு சமயம் ஒருவனுக்கு அவசரமாக ஐம்பது டாலர்கள்
தேவைப்பட்டது. அவனுக்கு அட்ரஸ் தெரியாததால் அவன்

கடவுள், c/o  போஸ்ட் மாஸ்டர் என்று முகவரி எழுதியிருந்தான். ஏனெனில் போஸ்ட் மாஸ்டருக்கு எல்லா அட்ரஸூம் தெரிந்திருக்குமே.

போஸ்ட் மாஸ்டர் அந்த லெட்டரை பிரித்தார். இது என்ன கடிதம் யாருக்கு இதை அனுப்ப
வேண்டும் கடவுளுக்கா என்ற குழப்பத்தில் பிரித்தார். அதை படித்தவுடன் அவர் மிகவும்
வருத்தம் கொண்டார். ஏனெனில் அந்த மனிதன் மிகவும் அவசர தேவையில் இருந்தான். அவனது
தாய்க்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, அவள் இறந்து கொண்டிருந்தாள், அவனிடம்
பணமில்லை, வேலையில்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை, மருந்து வாங்க காசில்லை. எனவே
இந்த ஒரு முறை மட்டும் ஐம்பது டாலர்கள் அனுப்பி வை. இனி ஒரு போதும் நான் உன்னிடம்
பணம் கேட்க மாட்டேன் என்று எழுதியிருந்தான்.

போஸ்ட்மாஸ்டர், ஏதாவது செய்யவில்லையென்றால் இந்த மனிதன் மிகவும் ஏமாற்றமடைந்துவிடுவான். என்று எண்ணினார்.

ஆனால் அந்த போஸ்ட் மாஸ்டர் மிகவும் செல்வந்தர் அல்லர். அவர் அந்த போஸ்ட் ஆபிஸில் இருந்த மற்ற அனைவரையும் கேட்டார். அவர்கள் அனைவரும் அவர்களிடம் இருந்ததை கொடுத்தனர். நாற்பத்தி
ஐந்து டாலர்கள் தேறியது. அவர் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ இதுவாவது தேறியதே,
ஐந்து டாலர்கள் தானே போதவில்லை என்று எண்ணியவாறு அந்த பணத்தை அனுப்பி வைத்தார்.

அந்த மனிதன் பணத்தை பெற்றுக் கொண்டவுடன் மிகவும் கோபமடைந்தான்.

அவன் கடவுள் படத்தைப் பார்த்து கூறினான்,  அடுத்த தடவை பணம் அனுப்பும்போது போஸ்ட் ஆபிஸ் மூலம் அனுப்பாதே. அவர்கள் தங்களது கமிஷன் பணம் ஐந்து
டாலர்களை எடுத்துக் கொண்டு விட்டனர் என்றான்.

-

நீ உண்மையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறாய், அதை அறியாமல் நடப்பை கற்பனை செய்து கொண்டே போகிறாய். 

தன்முனைப்பால், ஈகோவால் எதையுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.