ஒரு பெண் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவள் இறக்கும்போது அவளது சினேகிதி கேட்டாள் – ஏன் நீ திருமணமே செய்து கொள்ளவில்லை நீ மிகவும் அழகாக இருக்கிறாயே – என்று.

அதற்கு அவள், என்ன தேவை?

பயிற்சி கொடுப்பது என்று எடுத்துக் கொண்டால் நான் என் நாய்க்கு பயிற்சி கொடுத்துக் கொண்டே இருந்தேன். அது கற்றுக் கொள்ளவேயில்லை. ஒவ்வொரு நாளும் நான் அதற்கு பயிற்சி கொடுத்தேன். ஆனால் அது இரவில் தாமதமாகத்தான் வீடு திரும்பியது, இதைத்தானே ஒரு கணவனும் செய்யப்போகிறான்.

அதேபோல, ஒரு கணவன் இருந்தால் என்ன சொல்லுவானோ அது அனைத்தையும் சொல்லும் ஒரு கிளி இருந்தது என்னிடம். காலையில் அது என்னை ஹலோ டார்லிங் என்று கனிவாகக் கூப்பிடும். கூண்டைத் திறந்து விட்டவுடன் பறந்து திரிந்துவிட்டு பசிக்கும்போது வரும்.

மேலும் என்னிடம் எப்போதும் திருடும், பொய் சொல்லும் ஒரு பணியாள் இருந்தான். அவன் எப்போதும் ஒரு கணவனுடைய நடவடிக்கை எப்படியிருக்கும் என்று நினைவூட்டிவந்தான்.

பிறகு எதற்காக எனக்கு ஒரு கணவன் தேவை. எனது எல்லா தேவைகளும் நிறைவடைந்தன என்றாள்.

இப்படி ஆகிவிட்டது மனித வாழ்வு. மனத்தின் ஆட்சியே நடக்கிறது. உடலில் வாழவில்லை மனிதன். கற்பனையில், கருத்துக்கட்டில் வாழ்கிறான் மனிதன்.