1.
ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

-

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

 

2.
ஹைமி கோல்ட்பெர்க் இறந்தவுடன் நரகம் சென்றான். உடனேயே அவன் அங்கிருந்த எல்லோரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தான்.
”சைத்தான், நிறுத்து, நீதான் இந்த இடத்தின் சொந்தக்காரன் என்று எல்லோரும் நினைத்துக் கொள்வார்கள்” என்றான்.
”நான் ஹைமி, நான்தான் இதன் சொந்தக்காரன். நான் பூமியில் இருக்கும்போது எனது மனைவி எனக்கு இதை கொடுத்தாள்,” என்றான்.

-

உன் வாழ்வு இப்படித்தான் ஒருவருக்கொருவர் நரகத்தைக் கொடுப்பதாக உள்ளது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் உலகம் சொர்க்கமாக இருக்கும்.